தொழில்நுட்பம்

விண்வெளியில் அதிக நேரம் ‘ஸ்பேஸ்வாக்’; சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்

Published

on

விண்வெளியில் அதிக நேரம் ‘ஸ்பேஸ்வாக்’; சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்

கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர்.இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் ‘ஸ்பேஸ் வாக்’ செய்த பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார். மிகுந்த பாதுகாப்புடன்  5 மணி நேரம் 26 நிமிடங்கள் ‘ஸ்பேஸ்வாக்’ செய்தனர். 9வது முறையாக ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் ஸ்பேஸ்வாக் செய்துள்ளார்.சுனிதா மற்றும் புட்ச்  ஐ.எஸ்.எஸ்ஸுக்கு வெளியே பழுதான ரேடியோ தகவல்தொடர்பு வன்பொருளை அகற்றவும், சுற்றுப்பாதை ஆய்வகத்தின் வெளிப்புறத்தில் நுண்ணுயிரிகள் உள்ளனவா என்பதை அறிய  மாதிரிகளை சேகரிக்கவும் சென்றதாக கூறப்படுகிறது. ஈஸ்டர்ன் டைம்ஸ் படி காலை 7.43 மணிக்கு தொடங்கிய இந்த விண்வெளி நடை இந்திய நேரப்படி மதியம் 1.09 மணிக்கு முடிவடைந்தது, இது 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தது. இது வில்லியம்ஸுக்கு ஒன்பதாவது விண்வெளி நடை மற்றும் புட்ச் வில்மோரின் 5 ஆவது  ஐந்தாவது விண்வெளி நடையாகும்.சுனிதா வில்லியம்ஸ்க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version