சினிமா

அஜித், விஜய் பட நடிகைக்கு விரைவில் டும்..டும்..டும்..!! மாப்பிள்ளை யாரு தெரியுமா?

Published

on

அஜித், விஜய் பட நடிகைக்கு விரைவில் டும்..டும்..டும்..!! மாப்பிள்ளை யாரு தெரியுமா?

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் பார்வதி நாயர், தமிழ், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் ரவி மோகன் நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின்பு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் பார்வதி நாயருக்கு துணை நடிகைக்கான பிலிம் பேர் விருதும் நாமினேட் செய்யப்பட்டது.d_i_aஇதைத்தொடர்ந்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, மாலை நேரத்து மயக்கம், என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்திலும் சின்ன ரோலில் நடித்திருந்தார்.இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டாலும் பிறந்து வளர்ந்தது  எல்லாமே அபுதாபியில் தானாம். இவருடைய தந்தை துபாயில் தொழிலதிபராக காணப்படுகின்றார். அவருடைய அம்மா கல்லூரியில் பேராசிரியராக உள்ளாராம். இவர் 15 வயதிலேயே மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.இந்த நிலையில், நடிகை பார்வதி நாயரின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. தற்போது இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்திற்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இவர் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்ய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version