விளையாட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டி: பரிசுகளை அள்ளி சாதனை படைத்த புதுச்சேரி மாணவர்கள்

Published

on

மாநில அளவிலான கராத்தே போட்டி: பரிசுகளை அள்ளி சாதனை படைத்த புதுச்சேரி மாணவர்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கராத்தே போட்டியில் புதுச்சேரி அரியாங்குப்பம் இமாகுலேட் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பரிசுகளை கைப்பற்றி சாதனை படைத்தனர்.புதுச்சேரி தனியார் பள்ளியில்  நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கராத்தே போட்டியில் அரியாங்குப்பம் இமாகுலேட் பள்ளியின் மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று பரிசுகளை கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளனர். இதில் பள்ளியின் மாணவ மாணவிகள் 11 முதல் பரிசையும், 12 இரண்டாம் பரிசையும், 18 மூன்றாம் பரிசையும் பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனையை பள்ளியின் முதல்வரிடம் மாணவர்கள் இன்று சமர்ப்பித்தனர். முதல்வர் அவர்களை பாராட்டி, எதிர்காலத்திலும் மேலும் உயர்ந்த வெற்றிகளை பெற வாழ்த்தினார். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் வெற்றியை பாராட்டி, அவர்களுக்கு ஊக்கமளித்தனர்.செய்தி: பாபு  ராஜேந்திரன்  –  புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version