உலகம்

நைஜீரியாவில் இஸ்லாமிய பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி

Published

on

நைஜீரியாவில் இஸ்லாமிய பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்தது. இது அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது.

Advertisement

இரவு நேரமானதால், குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவில்லை. 

இதனால் தீயில் கருகி 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர்.

Advertisement

தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version