உலகம்

அரசாங்க சாதனங்களில் இருந்து டீப் சீக் செயலியை தடை செய்த தென் கொரியா

Published

on

அரசாங்க சாதனங்களில் இருந்து டீப் சீக் செயலியை தடை செய்த தென் கொரியா

பாதுகாப்பு மற்றும் டேட்டா பிரைவசி விவகாரத்தால் சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பாட்டுக்கு பயன்பாடு சார்ந்த கட்டுப்பாடுகளை தென் கொரியா விதித்துள்ளது.

இந்த உத்தரவை அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இன்னும் பிற அமைச்சகங்கள் அறிவித்துள்ளன.

Advertisement

அந்த நாட்டின் ராணுவ பிரிவு கணினிகளில் டீப்சீக் ஏஐ பாட் பயன்படுத்தக் கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். 

இதே போல பயனர்களின் டேட்டா பிரைவசி காரணமாக வெளியுறவு துறை மற்றும் தொழில்துறை அமைச்சகம் டீப்சீக் பயன்பாட்டை முடங்கியுள்ளது. டீப்சீட் ஏஐ பாட்டுக்கு அந்த நாட்டின் நிதித்துறை அமைச்சகம் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

முன்னதாக, இதே மாதிரியான நகர்வை இத்தாலி எடுத்திருந்தது. டீப்சீக் பயன்படுத்தும் பயனர்களிடம் இருந்து என்ன மாதிரியான தரவுகள் சேகரிக்கப்படுகிறது, அது எங்கு சேமிக்கப்படுகிறது மற்றும் அது குறித்த அறிவிப்பு பயனர்களுக்கு எப்படி தெரிவிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் டீப்சீக் சாட்பாட் வடிவமைப்பாளர்களிடம் இத்தாலி கேட்டிருந்தது.

Advertisement

அது தொடர்பாக கிடைத்த பதில், தரவு பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைய அந்த சாட்பாட் பயன்பாடு அங்கு முடக்கப்பட்டது.

நேற்றைய தினம் டீப்சீக், சாட்ஜிபிடி மாதிரியான ஏஐ பாட்கலை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலங்களில் பயன்படுத்த வேண்டாம் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version