பொழுதுபோக்கு

சக நடிகையுடன் காதல்: மௌனராகம் நடிகர் முக்கிய பதிவு; சின்னத்திரையில் இன்னொரு ஜோடி!

Published

on

சக நடிகையுடன் காதல்: மௌனராகம் நடிகர் முக்கிய பதிவு; சின்னத்திரையில் இன்னொரு ஜோடி!

விஜய் டிவியின் மௌனராகம் சீசன் 2 சீரியலில் நாயகனாக நடித்து பிரபலமான நடிகர் சல்மான், தன்னுடன் இணைந்து நடித்த நடிகையை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது போல், அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், அதிகமான ரசிகர்கள் பட்டாளமும் உருவாகி வருகிறது. இதன் காரணமாக ஒரு சீரியலில் ஜோடியாக நடித்த நடிகர் நடிகை, மற்றொரு சீரியலில் இணைந்து நடிக்கும்போது அந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும்.அதே சமயம், சீரியலில் இணைந்து நடித்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணைந்தால் எப்படி இருக்கும்? கடந்த சில வருடங்களாக இது தமிழ் சின்னத்திரையில் முக்கிய நிகழ்வுகளாக அரங்கேறி வருகிறது. ஏற்கனவே, ஆல்யா மானசா சஞ்சீவ், சித்து ஸ்ரேயா, உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள், நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர். அந்த வகையில், தற்போது மௌனராகம் சீசன் 2 நடிகர் சல்மானும் தன்னுடன் இணைந்து நடித்த நடிகைகயை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.மலையாள சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மேகா மகேஷ் என்பவரை சல்மான் காதலிப்பதாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே பல புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் காதலில் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய நிலையில், சல்மான் மற்றும் மேகா இருவருமே இந்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தனர். ஆனால் தற்போது சல்மான் தனது காதலை வெளிப்படையாக கூறியுள்ளார்.விஜய் டிவியின் மௌன ராகம் சீரியல் முடிவடைந்த உடன், மலையாளத்தில் ஒளிபரப்பான மிழி ரண்டிலும் என்கிற சீரியலில் சல்மான் நடித்து வரும் நிலையில், இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக, மேகா மகேஷ் நடித்து வருகிறார். நட்புடன் தொடங்கிய இவர்களின் பழக்கம நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் இவர்களின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என்று மலையாள சின்னத்திரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சல்மான் தற்போது சன்டிவியின் ஆடுகளம் சீரியலிலும் நடித்து வருகிறார்.A post shared by Salmanul Faris (@the__salmanul__official)மேகா மகேஷூடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சல்மான், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சஞ்சு முதல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆகி உள்ளோம். எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அன்பு, அக்கறை ஏற்ற இறக்கங்கள் துன்பங்கள் பயணங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version