இந்தியா

பிப்ரவரி 12-13 தேதிகளில் மோடி அமெரிக்கா பயணம்; டிரம்ப் மீண்டும் அதிரபரான பிறகு முதல் சந்திப்பு

Published

on

பிப்ரவரி 12-13 தேதிகளில் மோடி அமெரிக்கா பயணம்; டிரம்ப் மீண்டும் அதிரபரான பிறகு முதல் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 12-13 தேதிகளில் அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார் என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.ஆங்கிலத்தில் படிக்க: PM Modi to visit US on Feb 12-13, will meet Trump: Foreign Secretaryஜனவரி 20-ம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு மோடியின் முதல் அமெரிக்க பயணம் இது.சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேறிய இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.பிரதமர் மோடி, பிப்ரவரி 10-12 வரை பிரான்சுக்கு பயணம் செய்த பின்னர், அமெரிக்காவுக்குச் செல்வார். அங்கே பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு அவர் இணைத் தலைமை தாங்குவார்.ஜனவரி 27-ம் தேதி மோடியுடன் டிரம்ப் பேசினார். அப்போது அவர் குடியேற்றம் குறித்து விவாதித்தார். மேலும், இந்தியா அதிக அமெரிக்கத் தயாரிப்பு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும் நியாயமான இருதரப்பு வர்த்தக உறவுகளையும் வலியுறுத்தினார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version