இந்தியா
Delhi Election Result 2025 Live Updates: 27 ஆண்டுக்குப் பின் மீண்டும் டெல்லியை கைப்பற்றுமா பா.ஜ.க? வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடக்கம்
Delhi Election Result 2025 Live Updates: 27 ஆண்டுக்குப் பின் மீண்டும் டெல்லியை கைப்பற்றுமா பா.ஜ.க? வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடக்கம்
Delhi Assembly Election Result 2025 Counting Live Updates: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர்.ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வாக்கு எண்ணும் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.