உலகம்
அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!
அலாஸ்காவின் நோம் நகருக்கு அருகில், காணாமல் போன விமானத்தில் பயணித்த பத்து பயணிகளுடம் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (06) அலாஸ்காவின் நோம் நகருக்கு அருகில், விமானம் ஒன்று காணாமல் போனது .
இந்த விமானத்தில் பயணித்த 10 பேரில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் எழுவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தன .
இந்த நிலையில் விமானத்தில் பயணித்த 10 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான காலநிலை காரணமாகவே, விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது .
இருப்பினும், விசாரணைக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என, அலாஸ்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.