இந்தியா

டெல்லியைக் கைப்பற்றிய பாஜக!

Published

on

டெல்லியைக் கைப்பற்றிய பாஜக!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.குறித்த தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.

Advertisement

இதற்கமைய வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பர்வேஷ் வர்மாவை எதிர்த்துப் போட்டியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வியைத் தழுவியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதன்படி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை பெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version