இலங்கை

இதுவரை 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!…

Published

on

இதுவரை 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!…

நாடளாவிய ரீதியில்  இவ்வருடத்தின் (2025) இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

பாதாள உலக கும்பல்களின் தலைமையில் 07 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

ஏனையவை தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது.

Advertisement

பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

03 T -56 ரக துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

அத்துடன், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 04 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version