இலங்கை
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை இடம்பெறாது!
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை இடம்பெறாது!
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது நாளையதினம் இடம்பெறாது என கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்தானது நாளையதினம் (12) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் சேவையானது நாளையதினம் இடம்பெறாது எனவும், கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. (ப)