இலங்கை

மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

Published

on

மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ  எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, தூர் நாற்றம் என்பன ஏற்படுவதால் அயலில் வசிக்கும் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர் 

Advertisement

இந்நிலையில் போராட்டக்காரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

யாழ் போதனா மருத்துவமனை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டநிலையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் குறித்த பகுதியில் எரியூட்டி கடந்த வருடம் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. (ப)

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version