இலங்கை

மஹிந்தவின் நெருங்கிய சகாவிற்கு விளக்கமறியல்!

Published

on

மஹிந்தவின் நெருங்கிய சகாவிற்கு விளக்கமறியல்!

  டுபாயில் வாகன விபத்தில் இறந்து போனதாக பொய் பிரசாரம் செய்து அங்கு பதுங்கியிருந்த நிலையில், நாடு திரும்பிய டேன் பிரியசாத் இன்று கைதான நிலையில் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த டேன் பிரியசாத் , இன்று (11) காலை கட்டுநாயக்கவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்ட டேன் பிரசாத், அரகல போராட்டத்தின் போது பாரிய வன்முறையில் ஈடுபட்டவர்களின் முதன்மையானவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version