பொழுதுபோக்கு

ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தளம்: மீட்டெடுக்கும் நடவடிக்கை தீவிரம்; நடிகை த்ரிஷா தகவல்!

Published

on

ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தளம்: மீட்டெடுக்கும் நடவடிக்கை தீவிரம்; நடிகை த்ரிஷா தகவல்!

நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தமே இல்லாமல் பல பதிவுகள் வெளியாகி வருவதாகவும், தற்போது எக்ஸ் தளத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நடிகை த்ரிஷா தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக த்ரிஷா, அடுத்து அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து விக்ரமுடன் இணைந்து சாமி படத்தில் நடித்தார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதனைத் தொடர்ந்து, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள த்ரிஷா, இடையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்தார். அந்த படங்கள் கை கொடுக்காத நிலையில், மீண்டும நடிகர்களின் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கிய த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய வரவேற்பை கொடுத்தது.இந்த படத்தில், குந்தவையாக நடித்து கவனம் ஈர்த்த த்ரிஷா, அடுத்து விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்தார். இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து அஜித் நடிப்பில் விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இதில் கடந்த வாரம் வெளியான விடா முயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது த்ரிஷா, கமல் சிம்பு இணைந்து நடித்துள்ள தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.இதனிடையே, நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தனக்கு சம்பந்தம் இல்லாத சில பதிவுகள் போடப்பட்டு வருவதாகவும், தற்போது ஹேக் செய்யப்பட்ட பதிவுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், த்ரிஷா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. த்ரிஷாவின் எக்ஸ் தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version