இலங்கை

9 ஆண்டு விராட் கோலி ரெக்கார்டை உடைத்த கேன் வில்லியம்சன்

Published

on

9 ஆண்டு விராட் கோலி ரெக்கார்டை உடைத்த கேன் வில்லியம்சன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் 113 பந்துகளில் 133 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் மூலம், விராட் கோலியின் 9 ஆண்டு ஒருநாள் போட்டி சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7,000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் படைத்துள்ளார்.

Advertisement

இதன்படி கேன் வில்லியம்சன் 159 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

முன்னதாக குறித்த பட்டியலில் 161 இன்னிங்ஸ்களில் 7,000 ஓட்டங்களைக் கடந்து இரண்டாவது இடத்திலிருந்த விராட் கோலியை பின் தள்ளி அவர் முன்னேறியுள்ளார்.

அத்துடன் 151 இன்னிங்ஸ்களில் 7,000 ஓட்டங்களைப் பெற்று ஹஷிம் அம்லா முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version