விளையாட்டு

சர்வதேச சிலம்பம் போட்டி; 21 தங்கம் உட்பட 42 பதக்கங்கள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற கோவை மாணவர்கள்!

Published

on

சர்வதேச சிலம்பம் போட்டி; 21 தங்கம் உட்பட 42 பதக்கங்கள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற கோவை மாணவர்கள்!

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கோவையை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் உட்பட 14 பேர் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 42 பதக்கங்கள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.ஸ்ரீலங்கா சிலம்பம் ஃபெடரேஷன் சார்பாக சர்வதேச அளவிலான ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்ரீலங்கா நுவாரலாயா நகரில் நடைபெற்றது.சப் ஜூனியர் ,ஜூனியர், மற்றும் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா என பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அணி சார்பாக கோவையில் இருந்து முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தை சேர்ந்த 14 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது ஆற்றல் மிகு சிலம்பத்திறனை வெளிப்படுத்தி 21 தங்கம், 14 வெள்ளி, 7 வெண்கலம் என 42 பதக்கங்கள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.இந்நிலையில் பதக்கங்களுடன் கோவை திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் ஆகியோருக்கு   கோவை இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பி.ரஹ்மான், கோவை 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version