உலகம்

பணயக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஹமாசை எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர்!

Published

on

Loading

பணயக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஹமாசை எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர்!

பாலஸ்தீனிய குழு எதிர்வரும் “சனிக்கிழமை நண்பகலுக்குள் எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், காசாவில் போர் நிறுத்தத்தை முடித்துவிட்டு, தீவிரமான மோதலை மீண்டும் தொடங்குவோம்” என இஸ்ரேல் பிரதமர் ஹமாஸை எச்சரித்துள்ளார்.

பணயக்கைதிகளை விடுவிப்பதை அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, காசாவிற்குள்ளும் அதைச் சுற்றியும் இஸ்ரேலியப் படைகளை குவிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

Advertisement

எனினும், மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோருகிறாரா அல்லது இந்த சனிக்கிழமையன்று விடுவிக்கப்படவிருக்கும் மூவரையும் விடுவிக்கக் கோருகிறாரா என்பதை நெதன்யாகு தெளிவாக இந்த அறிவிப்பின் போது குறிப்பிடவில்லை. ஆனால், அவர் அனைத்து பணயக்கைதிகளையும் சுட்டிக்காட்டி கூறியதாக இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஹமாஸ், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாகவும், “எந்தவொரு சிக்கல்கள் அல்லது தாமதங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பு” என்றும் கூறியது.

இந்த வார இறுதியில் பணயக்கைதிகள் விடுவிப்பதை தாமதப்படுத்தும் ஹமாஸின் முடிவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, இஸ்ரேல் ஒப்பந்தத்தை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் என்றும், “அனைத்து பணயக்கைதிகளும்” சனிக்கிழமைக்குள் திருப்பி அனுப்பப்படாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version