விளையாட்டு
IND vs ENG Live Score, 3rd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் – இந்தியா முதலில் பேட்டிங்
IND vs ENG Live Score, 3rd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் – இந்தியா முதலில் பேட்டிங்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதல் மற்றும் 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England LIVE Cricket Score, 3rd ODI இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் தொடங்கி நடக்கிறது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இவ்விரு அணிகளுக்கு இதுவே கடைசி ஒரு நாள் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய முனைப்பு காட்டுவார்கள்.டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் – இந்தியா பேட்டிங் இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் போடுவதாக அறிவித்துள்ளார். இதனால், ரோகித் தலைமையிலான இந்தியா முதலில் பேட்டிங் ஆடுகிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவன்: இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.இங்கிலாந்து: பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), டாம் பான்டன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், மார்க் வூட், சாகிப் மஹ்மூத்.