பொழுதுபோக்கு

இனியாவுக்கு காதலன் என்ட்ரி: ஈஸ்வரிக்கு ராதிகா பதிலடி: கோபிக்கு வந்த புது சிக்கல்!

Published

on

இனியாவுக்கு காதலன் என்ட்ரி: ஈஸ்வரிக்கு ராதிகா பதிலடி: கோபிக்கு வந்த புது சிக்கல்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரிக்கு ராதிகா தக்க பதிலடி கொடுத்த நிலையில், எழில் பட இசை வெளியீட்டு விழா சிறப்பாக முடிந்துள்ளது.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஈஸ்வரி பாக்யாவிடம், ராதிகாவை எதுக்கு இங்கு கூப்பிட்டு வந்த, திரும்பவும் அவங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைக்க பாக்குறியா என்று கேட்க, இது என் மகன் பங்ஷன், இங்கு யார் இருக்கனும், அவன் முன்னேற்றத்தை யார் பார்க்க வேண்டும் என்று நினைத்து தான் அவங்களை அழைத்தேன். வேறு எந்த காரணமும் இல்லை என்று பாக்யா பதிலடி கொடுக்கிறாள்.அடுத்து, கோபி, ராதிகாவிடம் நலம் விசாரிக்க, ராதிகாவும் கோபியிடம் நலம் விசாரித்துவிட்டு, இது உங்க மகன் பங்ஷன், அவன் முன்னேற்றத்தை பார்த்து சந்தோஷப்படுங்க, வேற எதுவும் வேண்டாம் என்ற சொல்ல, கோபி சரி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்துகொள்கிறான். அடுத்து ஈஸ்வரி பாக்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ராதிகா அங்கு வர, என்ன திரும்பவும் அவனை மயக்கலாம்னு பாத்தியா என்று ஈஸ்வரி கேட்கிறார்.ஈஸ்வரியின் கேள்வியால் கடுப்பாகும் ராதிகா, எப்படி இருக்க என்று உங்க பையன் கேட்டார் அதற்கு நான் பதில் சொன்னேன். வேற எதுவும் இல்லை. திரும்பவும் அவருடன் சேர்ந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை என்று பதிலடி கொடுக்கிறாள். அதன்பிறகு எழிலிடம் பேசும் கோபி, இதுவரை தான் செய்த தவறுக்கான மன்னிப்பு கேட்க, அதை பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். மேலும், நீங்கள் இருவரும் இப்படி அதிக நேரம் பேசுவது இதுதான் முதல்முறை என்று சொல்கிறார்.அதன்பிறகு இனியா, குடும்பத்துடன் செல்பி எடுக்க, ராதிகாவையும் கூப்பிடுகிறாள். ஆனால் ராதிகா நான் போட்டோ எடுத்து கொடுக்கிறேன் என்று போட்டோ எடுக்கிறாள். அடுத்து இனியா ஃபாய்ப்ரண்டு பங்ஷனுக்கு வர இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அடுத்து ராதிகா, செல்வி, பாக்யா மூவரும் பேசிக்கொண்டிருக்க, கோபி சாரை விவாகரத்து பண்ணிட்டீங்க, வேறு ஒரு நல்லவரை பார்த்து திருமணம் செய்துகொள்ளுங்க என்று செல்வி சொல்ல, ராதிகா இனி திருமணமே வேண்டாம் என்று சொல்கிறார்.அதன்பிறகு உங்க அக்காவும், நல்ல அழகாதான் இருக்காங்க, அவங்களை திருமணம் செய்துகொள்ள சொல்லலாமே என்று சொல்ல, பாக்யா, எனக்கு இனிமேல் திருமணம் வேண்டாம் நான் நானாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிடுகிறார். அதன்பிறகு, உன் புருஷன் தான் சரியில்லையே நீ அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளலாமே என்று கேட்க, அவருக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருக்க என்னை விட்ட அவரை வேறு யாரும் பார்க்க மாட்டார்கள் என்று சொல்வி சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version