இலங்கை

கற்பகம் பனை சார் மற்றும் உள்ளூர் கைப்பணி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!…

Published

on

கற்பகம் பனை சார் மற்றும் உள்ளூர் கைப்பணி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!…

“கற்பகம்” பனை சார் மற்றும் உள்ளூர் கைப்பணி உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் நாட்டின் 25 மாவட்டங்களிலும் விரைவில் திறக்கப்படும் என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் தெரிவீத்துள்ளார்.

“கற்பகம்” பனை சார் மற்றும் உள்ளூர் கைப்பணி உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் சந்திக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாண தொழிற்துறை திணைக்களமும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து நடத்துகின்ற “கற்பகம்” விற்பனை நிலைய திறப்புவிழாவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version