இலங்கை

கிருமி நாசினி போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம்!…

Published

on

கிருமி நாசினி போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம்!…

வடக்கு மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசினிகளின் போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம் இம்மாதம் 24ஆம் தேதி முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.

எனவே விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசிகளின் போதில்களை சூழலில் வீசாது அவற்றை தமது தோட்டப்புறங்களில் வைத்தால் அவற்றை விவசாயத் திணைக்களம் கொள்வனவு செய்யும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் விவசாயத் திணைக்களத்திடம் அதனை ஒப்படைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

Advertisement

தற்போதைய கிறீன் ஸ்ரீலங்கா என்ற வேலை திட்டத்திற்கு அமைவாக குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாக விவசாய பிரதிபணிப்பாளர் சுட்டிக் காட்டினார்.

மேலும் விவசாய திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் விவசாய நிறுவனங்கள இணைந்து இதனை மீள் சுழற்சி செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக குறித்த போதல்களை கொள்வனவு செய்கின்றனர்.

எனவே மண்ணை வளப்படுத்தி அடுத்த சந்ததிக்கு சுத்தமான சூழலை கையளிக்கும் நோக்கமாக விவசாயிகள் இந்த வேலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Advertisement

மேலும் விவசாயத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்படாத கிருமி நாசினிகளை ச பயன்படுத்த வேண்டாம் எனவும் இது தொடர்பிலே கடந்த காலங்களில் சில விற்பனை நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு அவை இல்லாத செய்யப்பட்டன எனவே இது தொடர்பிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டார். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version