பொழுதுபோக்கு
சேலையில் அசத்தும் சுந்தரி: விரைவில் தமிழ் சினிமாவில் என்ட்ரி: இவர் யார்னு சொல்லுங்க பார்ப்போம்!
சேலையில் அசத்தும் சுந்தரி: விரைவில் தமிழ் சினிமாவில் என்ட்ரி: இவர் யார்னு சொல்லுங்க பார்ப்போம்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜான்வி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்படுபவர்.தன்னை பற்றி அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். ஜூனியர் என்.டி.ஆர் உடன் இவர் தெலுங்கில் நடித்த தேவாரா படம் வெளியாகியுள்ளது.படம் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் 2 பாகங்களாக உருவாகி உள்ளது.சமூவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஸ்ரீதேவியை ஜெராக்ஸ் எடுத்து போல் இருக்கிறார் என்றும் கமெண்ட்கள் வருவது வழக்கம்.அந்த வகையில் தற்போது சேலையில் ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.