இலங்கை

நெல் கொள்வனவிற்காக அனைத்து களஞ்சியசாலைகளையும் திறக்கும் அரசாங்கம்!

Published

on

நெல் கொள்வனவிற்காக அனைத்து களஞ்சியசாலைகளையும் திறக்கும் அரசாங்கம்!

நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து களஞ்சியசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

சில விவசாயிகள் ஏற்கனவே தங்கள் அறுவடை மாதிரிகளை நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிடங்குகளில் சோதனைக்காக சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

Advertisement

இருப்பினும், விவசாயிகள் இன்னும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்கவில்லை என்றும் தலைவர் கூறினார்.

இதேவேளை, விவசாயிகள் தங்கள் அறுவடையில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க வேண்டும் என்று அனுராதபுரம் மகாவாரி கூட்டு விவசாயிகள் அமைப்பின் தலைவர் புஞ்சிரல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version