விளையாட்டு

புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமனம்: இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா ஆர்.சி.பி?

Published

on

புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமனம்: இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா ஆர்.சி.பி?

ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி). அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான  ரஜத் படிதார் இந்தாண்டு (ஐ.பி.எல் 2025) தொடங்கி நடைபெறும் தொடரில் ஆர்.சி.பி அணியை வழிநடத்த இருக்கிறார். ஆர்.சி.பி அணியை முன்பு அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, ஷேன் வாட்சன், ராகுல் டிராவிட், விராட் கோலி, பாப் டூ பிளசிஸ் என நீண்ட வரிசையைக் கொண்ட கேப்டன்கள் வழிநடத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு ஆர்.சி.பி. அணியை வழிநடத்தும் 8-வது கேப்டன் என்கிற பெருமையை ரஜத் படிதார் பெற்றுள்ளார். .2022 முதல் 24 வரை என மூன்று சீசன்களில் ஆர்.சி.பி அணியை வழிநடத்திய ஃபாஃப் டு பிளெசிஸிடமிருந்து படிதார் பொறுப்பேற்கிறார். டு பிளெசிஸ் தலைமையிலான அணி இரண்டு முறை ஐ.பி.எல் பிளேஆஃப்களுக்குச் சென்றது. 31 வயதான இந்தூரில் பிறந்த ரஜத் படிதார், லுவ்னித் சிசோடியாவுக்கு மாற்று வீரராக 2022 சீசனில் ஐ.பி.எல் நடுவில் வியத்தகு முறையில் மீண்டும் நுழைந்தார், முன்பு 2021 இல் அந்த அணிக்காக நான்கு ஆட்டங்களில் விளையாடினார், ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் தக்கவைக்கப்படவில்லை.2022 இல் எட்டு ஆட்டங்களில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐ.பி.எல் எலிமினேட்டர் வெற்றியில் 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் உட்பட 333 ரன்கள் சேர்த்தார் படிதார். பின்னர் அகில்லெஸ் ஹீல் காயம் காரணமாக 2023 சீசனைத் தவறவிட்டார்.ஆனால், அடுத்த சீசனுக்கு அணியால் தக்கவைக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டில், அவர் 15 போட்டிகளில் 395 ரன்களை குவித்து, 33 சிக்ஸர்களை அடித்து, ஆர்.சி.பி அணிக்காக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.நவம்பர் 2024 இல் நடைபெற்ற ஐ.பி.எல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, முன்னாள் கேப்டன் விராட் கோலி (ரூ. 21 கோடி) மற்றும் யாஷ் தயாள் (ரூ. 5 கோடி) ஆகியோருடன் சேர்ந்து ரஜத் படிதார் ரூ.11 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். ரஜத் படிதார், சமீபத்தில் நடந்த 2024-25 சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மத்தியப் பிரதேசம் அணியை வழிநடத்தினார். 20  ஓவர்கள் கொண்ட இந்த தொடருக்கான இறுதிப் போட்டியில் மும்பையிடம்  மத்தியப் பிரதேசம் தோல்வியைத் தழுவியது. இந்த தொடரில் அதிகபட்சமாக 27 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 9 போட்டிகளில், ஐந்து அரைசதங்களுடன் 428 ரன்கள் குவித்தார்.  ஒட்டுமொத்தமாக, அவர் 75 டி20களில் 38.48 சராசரி மற்றும் 158.18 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2463 ரன்களை குவித்துள்ளார். ரஜத் படிதார் டிசம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் இந்தியாவுக்காக ஒரே ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version