பொழுதுபோக்கு
பேத்தியை வைத்து பாட்டி விட்ட சவால்: நிச்சயமான பெண்ணுக்கு மாப்பிள்ளை மாறுமா?
பேத்தியை வைத்து பாட்டி விட்ட சவால்: நிச்சயமான பெண்ணுக்கு மாப்பிள்ளை மாறுமா?
பாட்டியை சந்திக்க வந்த ரேவதி.. சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் பரமேஸ்வரி அம்மாவை நான் தான் வர சொன்னேன் என்று சொல்ல கார்த்திக் ஷாக்கான நிலையில் இன்று, ரேவதி பாட்டி வந்துட்டு போனதாலும் அவங்க இந்த குடும்பம் ஒன்னு சேரனும் என்று சொல்வதிலும் எனக்கு சந்தோசம் தான், ஆனால் நிச்சயம் ஆன என்னை பெண்ணு கேட்பது தான் வருத்தமாக இருக்கிறது என பீல் செய்கிறாள்.மேலும் பாட்டியை நேரில் சந்தித்து பேசி தீர்வு காண திட்டம் போடுகிறாள். அடுத்து பரமேஸ்வரி பாட்டியை சந்திப்பதற்காக ரேவதி கார்த்தியின் உதவியை நாடுகிறாள். கார்த்திக் ரேவதியை கோவிலில் டிராப் செய்து விட்டு சாமுண்டேஸ்வரி வர சொல்லி இருந்ததால் வீட்டிற்கு கிளம்பி வருகிறான். ரேவதி பரமேஸ்வரி பாட்டியை சந்தித்து இந்த குடும்பம் ஒன்னு சேரனும்னு தான் எனக்கும் ஆசை.. ஆனால் நிச்சயதார்த்தம் ஆன என்னை பெண் கேக்கிறது எப்படி பாட்டி சரியா இருக்கும் என கேள்வி கேட்கிறாள். அடுத்து சாமுண்டீஸ்வரி தனது தோழிகளுக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று சொல்லி கார்த்திக்கை அழைத்து கொண்டு இதே கோவிலுக்கு வருகிறாள். ரேவதி பரமேஸ்வரியுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். ரேவதியை அறைந்து அங்கிருந்து வீட்டிற்க்கு அழைத்து வர அவள் நான் விருப்பப்பட்டு தான் பாட்டியை பார்க்க சென்றதாக பதில் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கையில் காயத்துடன் முத்துப்பாண்டி.. கனிக்காக பரணி எடுக்கும் முடிவு – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி குழந்தையை காப்பாற்ற பெற்றோர் அவளை அமெரிக்காவிற்கு அழைத்த நிலையில் இன்று, பாக்கியம் சௌந்தரபாண்டியிடம் பரணி அமெரிக்காவிற்கு எல்லாம் போக தேவையில்லை. அவ சண்முகத்தோட வாழ்ந்து ஒரு குழந்தையை பெத்து கொடுக்கட்டும் என்று சொல்கிறாள். பிறகு சனியன் வந்து ஐயா பரணி அம்மா அமெரிக்கா போகலானா என்ன பண்றது என்று கேட்கிறான்.சௌந்தரபாண்டி பரணி அமெரிக்கா போனால் அந்த சண்முகம் குடும்பத்தை பிரிப்பேன். அவ அமெரிக்கா போகலனா அதையே வச்சி அந்த குடும்பத்தை பிரிப்பேன்.. எது நடந்தாலும் அந்த குடும்பத்தை பிரிப்பேன் என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து சண்முகம் குடும்பத்தினர் சிவராத்திரிக்காக கோவிலுக்கு கிளம்ப முத்துப்பாண்டி வராத காரணத்தினால் இசக்கியை வீட்டில் விட்டு செல்கின்றனர். முத்துபாண்டி கையில் காயத்துடன் இருக்க ஒரு கான்ஸ்டபிள் வீட்டில் டிராப் செய்து விட்டு கிளம்புகிறார். இசக்கி முத்துபாண்டிக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறாள்.அதன் பிறகு இங்கே கோவிலில் 14 வயசு குழந்தை ஒன்று பாட்டு பாட குழந்தையின் அப்பா இந்த ஊர்ல என் குழந்தையை விட அழகா பாட யாரும் இல்ல என்று சவால் விட பரணி கனியை பாட வைக்க திட்டமிடுகிறாள். சண்முகம் கனிக்கு முறையான பயிற்சி இல்லை வேண்டாம் என சொல்லியும் பரணி கனியை பாட வைக்க முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,