இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம வீட்டின் நீர் விநியோகம் துண்டிப்பு!

Published

on

மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம வீட்டின் நீர் விநியோகம் துண்டிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

எனினும், மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் தொடர்பான கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version