பொழுதுபோக்கு

“ஸ்லோ மோஷன் இல்லையென்றால் ரஜினி தாக்குப்பிடிக்க முடியாது” – இயக்குநர் ராம்கோபால்

Published

on

“ஸ்லோ மோஷன் இல்லையென்றால் ரஜினி தாக்குப்பிடிக்க முடியாது” – இயக்குநர் ராம்கோபால்

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை விமர்சித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா பேசியுள்ளார். ராம் கோபால் வர்மா அளித்த பேட்டியில் தெரிவித்து இருப்பதாவது, “ஒரு நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.Slow Motion மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. பாதி படம் முழுக்க எதுவும் செய்யாமல் ரஜினி ஸ்லோ மோஷனில் நடப்பதை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்.ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள். அதனால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும்” என்று தெரிவித்தார்.இந்த பேட்டியை பார்த்த, ரஜினிகாந்தின் ரசிகர்கள், இயக்குனர் ராம் கோபால் வர்மாவை இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version