உலகம்

ஹஜ் யாத்திரை : குழந்தைகளுக்கு அனுமதியில்லை!

Published

on

ஹஜ் யாத்திரை : குழந்தைகளுக்கு அனுமதியில்லை!

ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் இந் நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய 2025 ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக தங்கள் நாட்டுக்கு வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

உலகம் முழுவதுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு நாட்டுக்கும் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு ஆண்டுதோறும் ஹஜ் பயணத்திற்கான  அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடுமையான வெயில், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் மக்காவில் ஹஜ் பயணத்திற்கு வரும் பக்தர்களின் இறப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

Advertisement

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version