விளையாட்டு

CSK IPL 2025 Schedule: வெளியான ஐ.பி.எல். 2025 அட்டவணை… சி.எஸ்.கே-வின் முதல் போட்டி எப்போது?

Published

on

CSK IPL 2025 Schedule: வெளியான ஐ.பி.எல். 2025 அட்டவணை… சி.எஸ்.கே-வின் முதல் போட்டி எப்போது?

10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். டி20 தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.இந்த நிலையில், இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முந்தைய சீசனில் பெற்ற பின்னடைவில் இருந்து மீளும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போலவே, அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில், கடந்த சீசன் முழுவதும் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால் தோனி சென்னை அணியில் தொடர்ந்து ஆடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. அதனால், அவரது ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் வழக்கம் போல் தங்களது ஆதரவை அளிப்பார்கள். சென்னை அணி இந்த சீசனில், ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா, ஷிவம் துபே மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் தக்கவைத்துள்ளது. மேலும், டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா மற்றும் ஆர் அஷ்வின் போன்ற வீரர்களையும் அவர்கள் மெகா ஏலத்தில் எடுத்துள்ளனர். அவர்களை கொண்ட சிறந்த அணியை சென்னை களமிறக்கும் என நம்பலாம்.  ஐ.பி.எல். 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிகளின் பட்டியல்: ஐ.பி.எல் 2025 தொடரில் குவாலிபயர் 1 மே 20-ம் தேதியும், எலிமினேட்டர் மே 21-ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. குவாலிபயர் 2 மே 23-ம் தேதியும் இறுதிப்போட்டி மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளன. மொத்தம் 74 ஆட்டங்கள் 13 மைதானங்களில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version