பொழுதுபோக்கு

பராசக்தி இயக்குனர் பிறந்த நாள் வாழ்த்து: அர்ஜூன் பட டைட்டிலை கைப்பற்றிய சிவா: டீசர் வீடியோ வைரல்!

Published

on

பராசக்தி இயக்குனர் பிறந்த நாள் வாழ்த்து: அர்ஜூன் பட டைட்டிலை கைப்பற்றிய சிவா: டீசர் வீடியோ வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக உருவெடுத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு இயக்குனர் சுதா கொங்கரா வாழத்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில், குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்த சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பன்முகத்தன்மை, நகைச்சுவை மற்றும் திறமையான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.இதனிடையே இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் சிவகார்த்திகேயனுக்கு, அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பராசக்தி படத்தின் இயக்குனர், சுதா கொங்கரா சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தியில், பராசக்தி படத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, படப்பிடிப்பு தளத்தில் அவரின் அற்பணிப்பை காட்டுவதாக கூறி வருகின்றனர்.  A post shared by Sudha Kongara (@sudha_kongara)இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாயகனே!!! சிவகார்த்திகேயன் உங்களுடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில் இறுதியாக இந்த பயணமும், சினிமாவைத் தொடர்ந்து இயக்கத் தூண்டும் நிறுவனமும் இதுதான் என்று பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக மாறியுள்ளது, ரசிகர்கள் அவரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்வுகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகப் போக்குகளை ஏற்பாடு செய்கின்றனர்.இதற்கிடையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பிரபல கன்னட நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்து வரும் இந்த படத்தில், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், மேலும் படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தற்போது மதராஸி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு அர்ஜூன் இயக்கம் மற்றும் நடிப்பில் இதே டைட்டிலில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version