பொழுதுபோக்கு

சூரிய அஸ்தமனத்தில் நாங்கள்… கீர்த்தி சுரேஷ் கியூட் வெட்டிங் க்ளிக்ஸ்!

Published

on

சூரிய அஸ்தமனத்தில் நாங்கள்… கீர்த்தி சுரேஷ் கியூட் வெட்டிங் க்ளிக்ஸ்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர், நடிப்பில் சமீபத்தில் இந்தியில் பேபி ஜான் என்ற படம் வெளியானது. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக் தான் பேபி ஜான்.சமீபத்தில், கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டில் குறித்து சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த பதிவு திரைத்துறையில் உள்ள பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து கடந்த டிசம்பர் 12-ந் தேதி கோவாவில், பாரம்பரியமான தமிழ் பிராமணர் மற்றும் மலையாளி கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.திருமணத்திற்கு முன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இருவரும் மகிழ்ச்சியாக நடனமாடியும், காதலைத் தெரிவித்துக் கொண்டும் இருந்துள்ளனர். இந்த புகைப்படங்களை தற்போது கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version