இந்தியா

இந்தியாவுக்கான மானியத்தை நிறுத்திய அமெரிக்கா!

Published

on

இந்தியாவுக்கான மானியத்தை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்கும் கருத்துவேறுபாடுகள் உள்ளதை வெளிப்படுத்தும் விதத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்‘தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்’என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
உக்ரைன் ஜனாதிபதியாக தன்னை யாராவது மாற்ற விரும்பினால் அது நடைபெறாது என குறிப்பிட்டுள்ள அவர் 58 வீதமான உக்ரைன் மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்றார்.

Advertisement

உக்ரைன் குறித்து ரஷ்யா பல பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மீது சகல மரியாதையையும் வைத்திருக்கும் அதேவேளை அவர் தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.

உக்ரைன் ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தனக்கான மக்கள் ஆதரவு குறித்த பொய்யான புள்ளிவிபரத்தை ரஷ்யாவே பரப்பியுள்ளது என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

உக்ரைனில் உள்ள அபூர்வமான கனியவளங்களான லித்தியம் மற்றும் டைட்டானியத்தின் ஒரு பகுதியை அமெரிக்க ஜனாதிபதி கோரியுள்ளரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அந்த கனியவளங்களின் 50 வீதத்தின் உரிமையை அமெரிக்கா கோரியதாலும் எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காததாலும் தான் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

நான் உக்ரைனை பாதுகாக்கின்றேன் என்னால் அதனை விற்க முடியாது, எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது என வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷ்யாவை சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகள் மூலம் அமெரிக்கா மீண்டும் சர்வதேச அரங்கிற்கு கொண்டுவந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள  உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா உதவியை குறைத்தால் ஐரோப்பா என்ன ஆதரவை வழங்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துதார்.

Advertisement

ரஷ்யாவிற்கு பரந்துபட்ட விட்டுக்கொடுப்புகளை செய்வது  குறித்த யோசனைகளை நிராகரித்துள்ள அவர் இந்த யோசனையை உக்ரைன் மக்கள் நிராகரிக்கின்றனர் என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version