பொழுதுபோக்கு

பொதுமக்கள் கொடுத்த புகார்: சூர்யா படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்; காரணம் என்ன?

Published

on

பொதுமக்கள் கொடுத்த புகார்: சூர்யா படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்; காரணம் என்ன?

உரிய அனுமதி இன்றி படப்பிடிப்பு நடத்தியதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பை இரவு 11 மணியளவில் நிறுத்தியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வெளியான கங்குவா திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வசூலில் பெரும் சறுக்கலை சந்தித்தது. ஆனாலும் சூர்யா தனது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில்,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44-வது படமாக ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.அதனைத் தொடர்ந்து, அடுத்து தனது 45-வது படமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த தயாரித்து வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை த்ரிஷா இந்த படத்தின் மூலம் சூர்யாவுடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மாசானி அம்மன் கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. யோசி பாபு, நட்ராஜ் சுப்ரமணியம், லப்பர் பந்து சுவாசிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது, செங்கல்பட்டு மாவட்டம வெளிச்சை கிராமத்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த பகுதியில், உரிய அனுமதி இன்றி ராட்சத பேனர்கள், மேடைகள் அமைக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான நடவடிக்கை மேற்கொண்ட கேளம்பாக்கம் போலீசார், உரிய ஆய்வுக்கு பின் இரவு 11 மணியளவில் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது படக்குழுவுக்கு மட்டுமல்லாமல் சூர்ய ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version