திரை விமர்சனம்

கொடுத்த அலப்பறைக்கு நியாயம் சேர்த்ததா டிராகன்.? படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Published

on

கொடுத்த அலப்பறைக்கு நியாயம் சேர்த்ததா டிராகன்.? படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்கி இருக்கும் இன்று வெளியாகியிருக்கிறது. என பலர் இதில் நடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக ப்ரமோஷன் என்ற பெயரில் படகுழுவின் அலப்பறை அதிகமாக இருந்தது. தயாரிப்பாளர் முதல் அனைவரும் விழுந்து விழுந்து இன்டர்வியூ கொடுத்தார்கள்.

Advertisement

அந்த அலப்பறைக்கு நியாயம் சேர்த்ததா இப்படம் என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு விரிவாக காண்போம்.

கல்லூரியில் கெத்து காட்டி அலப்பறை செய்யும் பிரதீப் 48 அரியர் வைத்திருக்கிறார். வேலை வெட்டிக்கு செல்லாமல் பிக்பாஸ் பார்த்து நாளை கடத்துகிறார்.

ஆனால் நண்பர்களிடம் பணம் வாங்கி வீட்டில் கொடுத்து வேலைக்கு போவதாக டிராமா ஆடுகிறார். இதனால் அவரை பிரேக் அப் செய்கிறார் அனுபமா.

Advertisement

அதன் பிறகு போலி சான்றிதழ் வைத்து வேலைக்கு சேர்ந்து பெரிய இடத்துப் பெண் கயாடு லோஹரை திருமணம் செய்யும் அளவுக்கு வருகிறார்.

ஆனால் அதன் பிறகு பிரதீப் எதிர்பாராத ஒன்று அவர் வாழ்க்கையில் நடக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பதை இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

இளைஞர்களுக்கான கதை என்பதை உணர்ந்து பிரதீப் சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியில் அவருடைய கெத்து இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் எமோஷனல் என அனைத்திலும் அவர் ஸ்கோர் செய்திருக்கிறார்.

Advertisement

அதேபோல் நாயகி கயாடு கௌதம் வாசுதேவ் மேனன் விஜே சித்து அண்ட் கோ அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். ஆனால் அனுபமாவுக்கு பெரிய ஸ்கோப் ஒன்றும் இல்லை.

இதில் மிஷ்கின் கதாபாத்திரம் ரசிக்கும் வகையில் இருக்கிறது. இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பேசும் கெட்ட வார்த்தைகள் ரசிக்கும்படி இல்லை.

அதேபோன்று கிளாமர் காட்சிகளும் தேவையில்லாத ஆணியாக இருக்கிறது. இருந்தாலும் படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

Advertisement

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version