பொழுதுபோக்கு

‘முபாசா’ முதல் ‘வணங்கான்’ வரை… இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்!

Published

on

‘முபாசா’ முதல் ‘வணங்கான்’ வரை… இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்!

உண்மை சம்பவ பின்னணியில் இயக்குனர் வி.பி.வினு இயக்கியுள்ள படம் ‘சாட்சி பெருமாள்’. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் ரங்கராஜன் நடித்துள்ளார். மேலும் வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசையமைத்துள்ளார். இப்படம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்துப் போடுபவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் இப்படம் கடந்த 17-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.தி ஒயிட் லோட்டஸ் என்பது டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படமாகும். இதனை மைக் ஒயிட் எழுதி இயக்கியுள்ளார். இதன் முதல் இரண்டு சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சீசன் 3 உருவாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் கடந்த 17-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங் . இப்படம் கடந்த டிசம்பர் 20-ந் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தில் காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம், காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 18-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் கடந்த ஜனவரி 10-ந் தேதி வெளியான திரைப்படம் ‘வணங்கான்’. இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று, 21-ந்தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘டாகு மகாராஜ்’. இப்படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எஸ் தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் ‘பாட்டல் ராதா. இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் படமாக அமைந்துள்ளது. இந்தநிலையில் இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.இயக்குனர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் வகை திரைப்படம் ‘செல்பி’. இந்தப் படத்தில் இயக்குனர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய ‘வி கிரியேசன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இப்படம் இன்று சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.ஆபிஸ் என்பது கபீஸ் இயக்கிய ஒரு நகைச்சுவை வெப் தொடராகும். இதில் நட்சத்திர நடிகர்களான குரு லட்சுமணன், சரித்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சிவா ஆகியோருடன் அரவிந்த், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். கிராமம் ஒன்றில் அமைந்துள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version