பொழுதுபோக்கு
சூரியன் முத்தமிட்ட தருணமாம்: பிரபல சீரியல் நடிகை க்ளாசிக் க்ளிக்ஸ்!
சூரியன் முத்தமிட்ட தருணமாம்: பிரபல சீரியல் நடிகை க்ளாசிக் க்ளிக்ஸ்!
சின்னத்திரையில் ஜீ தமிழ் சீரியலில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியல் அண்ணா.தாய் இல்லாத நிலையில், 4 தங்கைகளுடன் வாழும் ஒரு அண்ணனின் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த சீரியல் தினசரி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த சீரயிலில், சண்முகம் என்ற கேரக்டரில் ஆர்.ஜே.செந்தில்குமார் நடித்து வருகிறார். இவருக்கு 4 தங்கைள் உள்ளனர்.இதில் 2-வது தங்கை இசக்கி கேரக்டரில் நடித்து வருபவர் தான் ப்ரீத்தா சுரேஷ்.ரத்னா கழுத்தில் தாலி கட்டபோய் தற்போது முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் தாலி கட்டிவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரீத்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.