விளையாட்டு

NZ vs BAN Live Score: தொடக்க ஜோடியை உடைத்த நியூசிலாந்து… வங்கதேசம் நிதான ஆட்டம்

Published

on

NZ vs BAN Live Score: தொடக்க ஜோடியை உடைத்த நியூசிலாந்து… வங்கதேசம் நிதான ஆட்டம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நேற்று முன்தினம் புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் படிக்கவும்: New Zealand vs Bangladesh LIVE Cricket Score, Champions Trophy 2025முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால்,  ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். இந்நிலையில்,  ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2:30 மணி முதல் தொடங்கி நடந்து வரும் 6-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.  டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் – வங்கதேசம் இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  இரு அணி வீரர்கள் பட்டியல்: நியூசிலாந்து: வில் யங், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே. வங்கதேசம்: தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தாபிசுர் ரஹ்மான் 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version