உலகம்

நைஜீரியாவில் பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்து!

Published

on

நைஜீரியாவில் பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்து!

நைஜீரியாவின், நைஜர் மாகாணத்தில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். 

குசோபோகி பகுதிக்கு அருகில் 30 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று முன்னால் பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தியை முந்திசெல்ல முற்பட்ட வேளையில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி மீதி மோதியுள்ளது . 

Advertisement

இதன் காரணமாக குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் சில மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version