இந்தியா

புதுச்சேரி: பணியின்போது இறந்த வாரிசுதாரர்கள் 12-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

Published

on

புதுச்சேரி: பணியின்போது இறந்த வாரிசுதாரர்கள் 12-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி சுகாதாரத்துறையில், பணியின்போது இறந்த வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி 12-வது நாளாக வாரிசுதாரர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சுகாதாரத்துறையில், பணியின்போது இறந்த வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.தொடர்ந்து, பணி நியமனம் வழங்க கோரி, சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசு தாரர்கள் நலச்சங்கம் சார்பில், சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 12வது நாளாக நடந்த போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், டேவிட் ஆகியோர் தலைமையில், சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version