விளையாட்டு

மழை காரணமாக சாம்பியன்ஸ் டிராபியின் 7வது போட்டி ரத்து

Published

on

மழை காரணமாக சாம்பியன்ஸ் டிராபியின் 7வது போட்டி ரத்து

9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

Advertisement

இந்நிலையில், இந்த தொடரில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுவதாக இருந்தது. 

ஆனால் இந்த ஆட்டம் தொடங்கும் முன்னரே அங்கு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisement

ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version