சினிமா
இந்தியன்-3 பொறுப்பை ஏற்க மறுக்கிறாரா கமல்?. உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!
இந்தியன்-3 பொறுப்பை ஏற்க மறுக்கிறாரா கமல்?. உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கடந்த வருடம் ரிலீஸ் ஆன இந்தியன் 2 படம் மிகப்பெரிய பொருளாதார அடியை கொடுத்து இருக்கிறது.
இதனால் இந்தியன் 3 படத்தை முடிக்க தேவைப்பட்ட காட்சிகளை படமாக்க லைக்கா நிறுவனம் தயாராக இல்லை.
உண்மையை சொல்லப்போனால் இந்த நிறுவனம் இந்தியன் 3 தயாரிப்பில் இருந்து விலகிக் கொண்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பு வலைப்பேச்சு சேனலில் சொல்லி இருந்தார்கள்.
இதனால் கமல் இணக்கமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினிடம் இந்த படத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது.
கமலுக்கு இந்தியன் 2 தான் தோல்வியே தவிர அவருடைய சொந்த தயாரிப்பான அமரன் படம் பல மடங்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.
அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தியன் திரைப்படத்தை ஏன் அவர் முடிக்க கூடாது.
இந்தியன் 2 வில் எடுக்கப்பட்ட அதிகமான காட்சிகளை தான் அடுத்த பாகமாக உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதை அதிகமாக எடுத்தது யாருடைய தரப்பில் நடந்த தவறு. இதை மூன்றாவது பாகமாக மாற்றிவிடலாம் என ஐடியா கொடுத்தது யார் என்பதெல்லாம் வெளியில் வரவில்லை.
இப்போதைக்கு கமல் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் இந்த படத்தை தயாரித்து விநியோகிக்க ஏன் மறுக்கிறார் என்பதுதான் பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே போட்டு விடுகிறேன் என சில வருடத்திற்கு முன் சொன்ன கமல் இந்தியன் 3 படத்தின் பொறுப்பை ஏற்க தயங்குகிறாரோ என்ற சந்தேகம் தான் இப்போது வலுக்கிறது.