விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேற்றம்

Published

on

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேற்றம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டியில் பி பிரிவில் இடம்பிடித்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது.

Advertisement

37 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் இப்ராகிம் ஜட்ரன் சிறப்பாக விளையாடி 106 பந்தில் சதம் விளாசினார். அவர் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 177 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, 326 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் ஜோ ரூட் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 120 ரன்னில் அவுட்டானார். 

இறுதியில் இங்கிலாந்து 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன், இங்கிலாந்து அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.

Advertisement

ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மதுல்லா ஒமர்சாய் 5 விக்கெட்டும், முகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version