இலங்கை

திருந்துங்கள் இல்லை அடக்கப்படுவீர்கள்; பாதாள உலக குழுவினருக்கு பிமல் பகிரங்க எச்சரிக்கை!

Published

on

திருந்துங்கள் இல்லை அடக்கப்படுவீர்கள்; பாதாள உலக குழுவினருக்கு பிமல் பகிரங்க எச்சரிக்கை!

  இலங்கையில் பாதாள உலக குழுக்கள் நடத்தும் கொலைகளை நிறுத்துமாறும் தொடர்ந்து கொலைகளைச் செய்தால், அவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர், நாடாளுமன்ற சபை தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில்,

Advertisement

அரசியல் ஆதரவில்தான் பாதாள உலகம் உருவானது. பராமரிக்கப்பட்டது, கட்டப்பட்டது.

அந்த பாதாள உலக பிரச்சனையால் நமது நாடு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலக பிரச்சனை பொலிஸ் நடவடிக்கைகளால் மட்டும் ஒடுக்க முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம்.

Advertisement

அதற்கான பதில்களை நாங்கள் தருவோம், ஆனால் தற்போது பொலிஸ் நடவடிக்கைகள் நடப்பதால் , நாங்கள் அதில் தலையிட்டு வருகிறோம்.

கடந்த நாட்களில் பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது. ஏனெனில் பாதாள உலகத்தினரால் அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை.

எனவே, தற்போது பாதாள உலகத்தில் இருப்பவர்களிடம் நாங்கள் கூறுகிறோம், தயவு செய்து அனைத்தையும் நிறுத்திவிட்டு, சாதாரண முறையில் உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப முயற்சி செய்யுங்கள்.

Advertisement

.

இல்லையெனில், அதை கணிசமான அளவிற்கு ஒடுக்க அரசாங்கம் சட்டப்பூர்வ வரம்புகளுக்குள் தேவையானவற்றை செய்யும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடும் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version