சினிமா

நடிகர் அஜித் மற்றும் சங்கர் கூட்டணி முறிந்துவிட்டதா? – பதில் தர மறுக்க காரணம் என்ன?

Published

on

நடிகர் அஜித் மற்றும் சங்கர் கூட்டணி முறிந்துவிட்டதா? – பதில் தர மறுக்க காரணம் என்ன?

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக இருக்கும் சங்கர், சமீபத்தில் நடிகர் அஜித்திற்கு ஒரு முக்கியமான செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு அஜித் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.அதற்கு சிலர், சங்கரின் சமீபத்திய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அஜித் வேணும் என்றே பதில் தரவில்லை என்று கருதுகின்றனர். அத்துடன், சினிமா வட்டாரங்களில் இயக்குநர் சங்கர் மற்றும் நடிகர் அஜித் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வாய்ப்புள்ளது என்ற செய்திகள் முன்னதாகவே வெளியாகியிருந்தன. இந்த தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் தற்பொழுது வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது, இயக்குநர் சங்கர் ‘இந்தியன் 3’ உள்ளிட்ட பல பெரிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கர் அனுப்பிய மெசேஜிற்கு அஜித் பதில் அளிக்காததற்கான காரணம் இன்னும் தெளிவாக  தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் மற்றும் பல்வேறு கருத்துக்களையும் எழுப்பியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version