சினிமா
மஹாலட்சுமிக்கும் ரவீந்தருக்கும் இடையில் பிரச்சனையா? உண்மையை உடைத்த மஹாலட்சுமி!
மஹாலட்சுமிக்கும் ரவீந்தருக்கும் இடையில் பிரச்சனையா? உண்மையை உடைத்த மஹாலட்சுமி!
நடிகை மஹாலட்சுமி சமீபத்திய நேர்காணலில், தனது கணவர் ரவீந்தர் குறித்து வெளிப்படையாக பேசினார். அதில் அவர், சமூக வலைதளங்களில் சிலர் ரவீந்தரின் உடல் எடையை விமர்சிப்பதைப் பற்றிப் பேசியதுடன் அதற்கான அவரது கருத்தையும் கூறியுள்ளார்.அதில் மஹாலட்சுமி கூறியதாவது, “எனக்கு ரவீந்தரின் உடம்பு பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை. அதை ஏன் மற்றவர்கள் ஒரு குறை மாதிரி பார்க்கிறார்களோ தெரியவில்லை” என்றார். மேலும், சிலர் அவரது கணவரின் உடல் எடையை விமர்சிப்பது குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளார்.அத்துடன் அவர் , “ஒரு வெயிட்டைக் குறையாக சொல்லுவதற்கு எப்படி தான் மனம் வருதோ தெரியலை என்றதுடன் நான் அவருடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனவும் தெரிவித்தார். ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதை நான் பார்த்துக்கொள்வேன்” என்று உறுதியாகக் கூறினார்.மேலும் நடுவர், சமூக வலைதளங்களில் மஹாலட்சுமி மற்றும் ரவீந்தர் தம்பதியினர் திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து நடந்தது என பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன என்றார். எனினும் இதற்கு மிகத் தெளிவாக மஹாலட்சுமி பதிலளித்தார். அவர் அதில் “எங்கள் 2 பேருக்கும் டிவோர்ஸ் ஆகிவிட்டது என்று நிறைய கதை வெளியானது. அவை அனைத்தும் பொய்யானவை” எனக் கூறினார்.