விளையாட்டு

ENG vs AFG Live Score: வெற்றி யாருக்கு? இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

Published

on

ENG vs AFG Live Score: வெற்றி யாருக்கு? இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் கடந்த புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் படிக்கவும்: England vs Afghanistan LIVE Cricket Score, Champions Trophy 2025முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று புதன்கிழமை மதியம் 2:30  மணிக்கு தொடங்கி நடைபெற உள்ள 8-வது லீக்கில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றிக்கணக்கை இன்னும் தொடங்காமல் இந்த இரு அணிகளும் உல்லன். அரையிறுதிக்குள் நுழைய இந்த  இரு அணிகள் இன்றையப் போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version