உலகம்

அமெரிக்காவில் அதீத போதை காரணமாக மூன்று இளம் பெண்கள் மரணம்

Published

on

அமெரிக்காவில் அதீத போதை காரணமாக மூன்று இளம் பெண்கள் மரணம்

அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள். தோழிகளான மூன்று பேரும் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர். 

குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தனர்.

Advertisement

இந்த நிலையில் திடீரென அவர்கள் மூன்று பேரும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களின் உடலையும் மீட்டனர்.

தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை துப்பு துலக்கினர். அறையில் இருந்த காலி மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் அதீத போதை காரணமாக இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version