பொழுதுபோக்கு

இதயத்திற்கு நெருக்கமான படம்: ஜெஸ்ஸியை மறக்க முடியுமா? நடிகை த்ரிஷா வீடியோ வைரல்!

Published

on

இதயத்திற்கு நெருக்கமான படம்: ஜெஸ்ஸியை மறக்க முடியுமா? நடிகை த்ரிஷா வீடியோ வைரல்!

கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி எவர்கிரீன் ஹிட் அடிதம்த விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த படம் குறித்து நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.காதலை வித்தியாசமான கோணத்தில் காட்டுவதில் வல்லவர் இயக்குனர் கௌதம்மேனன். கடந்த 2001-ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என ஆக்ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்டார். அடுத்து சூர்யா நடிப்பில் வாரணம் ஆயிரம் என்ற படத்தை கொடுத்து அசத்திய கௌதம், 2010-ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.சிம்பு த்ரிஷா இணைந்து நடித்த இந்த படத்தில் விடிவி கணேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். காதலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படம், வெளியான புதிதில், தங்கள் பழைய காதலை நினைவூட்டும் வகையில் இந்த படம் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறியிருந்தனர். சமந்த, நாக சைத்தன்யா ஆகியோர் சிறிய கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருந்த நிலையில், தெலுங்கு ரீமேக்கில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர், கௌதம் மேனனே அந்த படத்தையும் இயக்கியிருந்தார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் வைப்பில் இருந்து வருகிறது. பாக்ஸ்ஆபீஸில் பெரிய வெற்றியை பெற்றிருந்த இந்த படம் தொடர்ந்து 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படம் என்ற புதியவ வரலாற்று சாதனையும் படைத்தது தற்போது இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.Thank you🫶🏻#15yearsofVTV https://t.co/9jS9Yqi9CEஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் திரைப்பயணத்தின் மிகச் சிறந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி கௌதம் மேனன். இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு மிகவும் பெருமை அடைகிறேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம். ஜெஸ்ஸியை இன்னும் ஞாபகப்படுத்தி கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version