சினிமா
உங்க கணவரை விட விஜய் தான் சிறந்தவர்!! கமெண்ட் செய்தவருக்கு ஜோதிகா கொடுத்த பதிலடி..
உங்க கணவரை விட விஜய் தான் சிறந்தவர்!! கமெண்ட் செய்தவருக்கு ஜோதிகா கொடுத்த பதிலடி..
தமிழ் சினிமாவில் ஒருசில ஜோடிகள் தான் காதலித்து திருமணம் செய்து இன்றுவரை மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்கள் சூர்யா – ஜோதிகா தம்பதியினர்.பல படங்களில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்து அவரையே திருமணம் செய்த ஜோதிகா சினிமாவில் இருந்து விலகி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் பக்கம் சென்று மும்பையிலேயே அதற்காக செட்டிலாகிவிட்டார்.தற்போது டப்பா கார்டெல் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ள ஜோதிகா அப்படத்தின் பிரமோஷனுக்காக மாடர்ன் ஆடையில் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் வெளியிட்ட போட்டோஷூட் பதிவு ஒன்றில், ரசிகர் ஒருவர், விஜய் தான் உங்க கணவரைவிட சிறந்தவர் என்று கமெண்ட் செய்துள்ளார்.அதற்கு ஜோதிகா சிரிக்கும் எமோஜியை மட்டும் ரீப்ளே கமெண்டாக போட்டு பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு பலரும் ஜோதிகாவின் இந்த ரியாக்ஷனை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.